முகப்பு
தற்போதைய செய்திகள்

செம்மரங்களை கடத்தியவர்கள் கைது

வேலூர் அடுத்த அமிர்தி காட்டில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது செம்மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்த ஒரு கும்பல் வன அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்து

Updated On : 12 ஜூன் 2013, 2:55 pm IST
பகிர்:

வேலூர் அடுத்த அமிர்தி காட்டில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது செம்மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்த ஒரு கும்பல் வன அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். வனத்துறையினர் அவர்களை விரட்டி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 136 கிலோ செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.

இது தொடர்பாக கணியம்பாடியை சேர்ந்த வேலு, ராஜா, ரங்காபுரத்தை சேர்ந்த ராகுல், கட்டைமணி, திருப்பதியை சேர்ந்த விஜயகுமார், மஞ்சுநாதன் ஆகியோரை கைது செய்தனர்.மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.