நாமக்கல்லில் 6 குழந்தைத் திருமணங்கள் நிறுத்தம்
நாமக்கல்லில் வெவ்வேறு இடங்களில் நடைபெறுவதாக இருந்த 6 குழந்தைகள் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் வெவ்வேறு இடங்களில் நடைபெறுவதாக இருந்த 6 குழந்தைகள் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மாணவிகள் உட்பட 18 வயது நிரம்பாத பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதாக ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, வெவ்வேறு இடங்களில் நடைபெறுவதாக இருந்த திருமணங்கள் இன்று நிறுத்தப்பட்டன.
திருமணம் நடைபெறும் இடத்துக்கு, ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள், குழந்தைகள் நல அமைப்பினர், வருவாய் துறையினர் சென்று திருமணத்தை நிறுத்தி பெண் குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர்.
Advertisement
Advertisement
மேலும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம். மீறி திருமணம் நடத்தி வைக்க முயன்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெண் மீற்றும் பையன்களின் பெற்றோரிடம் எச்சரித்து போலீசார் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிக் கொண்டனர்.