முகூர்த்த நாள் : பூக்கள் விலை பல மடங்கு உயர்வு
புதன்கிழமையான இன்று முகூர்த்த நாள் என்பதால், பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
புதன்கிழமையான இன்று முகூர்த்த நாள் என்பதால், பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மல்லிகைப் பூ விளைச்சல் நன்றாக இருந்ததை அடுத்து, குறைந்த விலையில், அதிக பூக்கள் விற்கப்பட்டன.
ஆனால், இன்று முகூர்த்த நாள் என்பதால், மதுரையில் மல்லிகைப்பூ உள்ளிட்ட பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது.
Advertisement
Advertisement
ரூ.100 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மல்லிகைப் பூ ரூ.500க்கும், ரூ.150 விற்பனையான சம்பங்கி ரூ.800க்கும் விற்பனையானது. மேலும், கனகாம்பரம் பூ ரூ.300ல் இருந்து ரூ.500 ஆக உயர்ந்துவிட்டது. இதனால், கடைகளிலும், பூக்களின் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.