முகப்பு
தற்போதைய செய்திகள்

முதல்வரை சந்தித்தார் தேமுதிக எம்.எல்.ஏ. பாண்டியராஜன்

விருதுநகர் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. பாண்டியராஜன் முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்தார்.முதல்வரை சந்திக்கும் 7வது தேமுதிக எம்.எல்.ஏ இவர் ஆவார்.

Updated On : 12 ஜூன் 2013, 4:16 pm IST
பகிர்:

விருதுநகர் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. மா.பாண்டியராஜன் முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்தார்.அப்போது தனது தொகுதி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்படி முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.இதன்மூலம் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியின் வளர்ச்சிக்கு செயல்படுத்த வேண்டிய முக்கிய திட்டங்களான அரசு மருத்துவக் கல்லூரியை விரைவில் அமைக்க வேண்டும். விருதுநகர் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான ரயில்வே மேம்பாலத்திற்கான பணியை விரைவில் வழக்குகளை முடித்து தொடங்க வேண்டும்.

நகராட்சியின் குடிநீர் ஆதாரமான கௌசிகா நதியை தூர்வாரவும், நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்யவும் மற்றும் குடிநீரை சேமிக்கும் வகையில் இரண்டு மேல் நிலைத் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தியே தமிழக முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்தாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.