முகப்பு
தற்போதைய செய்திகள்

உத்தர்கண்ட் மாநில நிவாரணத்துக்கு ரூ. 10 லட்சம் வழங்குவதாக விஜயகாந்த் அறிவிப்பு

உத்தர்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், அம் மாநிலத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரண உதவியை வழங்குவதாகவும் அறிவித்தார்.

Updated On : 21 ஜூன் 2013, 2:29 pm IST
பகிர்:

உத்தர்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், அம் மாநிலத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரண உதவியை வழங்குவதாகவும் அறிவித்தார்.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

பருவ மழை காரணமாக வட

Advertisement

Advertisement

மாநிலங்களான உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டு, அதன் காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புண்ணிய ஸ்தலங்களான கேத்ரிநாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற இடங்களில் பெய்த பெரு மழையினால் கடும் நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக பெரும்பாலேனார் உயிரிழந்துள்ளனர். அதில் அதிக அளவில் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்ற பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல நகரங்கள், கிராமங்கள் உருக்குலைந்துபோய் உள்ளன. அதை பார்க்கின்றபோது மிகப் பெரிய நில நடுக்கத்திலும், சுனாமியிலும் ஏற்பட்ட பாதிப்பு போல் உள்ளது. அதன் மூலம் பல கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் நாசமடைந்துள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் மீண்டு பழைய நிலைக்கு வருவதற்கு பல மாதங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது.

வெள்ள பாதிப்பினாலும், நிலச்சரிவாலும் தீவுகளுக்குள் சிக்கிய மனிதர்கள் போல் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்கு அந்த மாநில அரசும், மத்திய அரசும் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தாலும், இன்னும் ஆயிரக் கணக்கானோர் மீட்கப்படாமல் உள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். மேலும் இந்த இயற்கை சீற்ற பேரழிவில் இறந்தவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும் தே.மு.தி.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இந்த இயற்கை பேரழிவில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை காத்திடவும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும், அவர்களுக்கு உதவுகின்ற வகையில் எனது சார்பில் அந்த மாநிலத்திற்கு 10 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக வழங்குகின்றேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments