முகப்பு
தற்போதைய செய்திகள்

விஜயகாந்துக்கு வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு

தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், மக்கள் வரிப்பணத்தை தமிழக அரசு விளம்பரம் மூலம் வீணடிக்கிறது என்று கூறினார். இதனை அடுத்து விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில்

Updated On : 1 ஜூலை 2013, 3:46 pm IST
பகிர்:

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், மக்கள் வரிப்பணத்தை தமிழக அரசு விளம்பரம் மூலம் வீணடிக்கிறது என்று கூறினார். இதனை அடுத்து விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகாததால், சென்னை முதன்மை அமர்வு வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், வரும் 29-ம் தேதிக்குள் கண்டிப்பாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.