முகப்பு
தற்போதைய செய்திகள்

வெள்ளையப்பன் கொலையாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்: வி.எச்.பி

வேலூரில் இந்து முன்னணி அமைப்பின் தொண்டர் வெள்ளையப்பனைக் கொலை செய்தவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் ஆலோசகர் எஸ்.வேதாந்தம் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On : 1 ஜூலை 2013, 7:44 pm IST
பகிர்:

வேலூரில் இந்து முன்னணி அமைப்பின் தொண்டர் வெள்ளையப்பனைக் கொலை செய்தவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் ஆலோசகர் எஸ்.வேதாந்தம் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதில்,

வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு இந்து சமுதாயத்திற்குப் பணிசெய்து வந்த இந்து முன்னணி இயக்கத்தின் மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு, தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத்தினர் அனைவரும் மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தோம்.

Advertisement

Advertisement

தமிழக அரசு, இந்தப் படுபாதகக் கொலையைச் செய்த கொலையாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்திக் கடுமையான தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்று தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் கேட்டுக் கொள்கிறது.

வெள்ளையப்பனின் பிரிவு அவருடைய அன்புக் குடும்பத்தாருக்கு மட்டுமல்லாமல், இந்து சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எங்களுடைய இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு அன்னாருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். - என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments