இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டி: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 202
போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறும் இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 201 ரன்களில் ஆட்டம் இழந்தது.
போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறும் இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 201 ரன்களில் ஆட்டம் இழந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி, 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 201 ரன் எடுத்தது.
அணியில் அதிக பட்சமாக சங்ககரா 71 ரன் எடுத்தார். திரிமன்னே 46 ரன்னும், ஜெயவர்த்தனே 22 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
Advertisement
Advertisement
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, அஸ்வின் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதை அடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.