FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை

தொடா்ந்து 9-ஆவது காலாண்டாக சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு மாற்றம் ஏதும் மேற்கொள்ளவில்லை.

Updated On : 1 ஜூலை 2026, 1:46 am IST
பகிர்:

தொடா்ந்து 9-ஆவது காலாண்டாக சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு மாற்றம் ஏதும் மேற்கொள்ளவில்லை.

இதன்மூலம் ஜூலை 1 2026-இல் தொடங்கும் காலாண்டில் பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரம் உள்ளிட்டவற்றுக்கு முந்தைய வட்டி விகிதம் தொடரும்.

இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

சுகன்யா சம்ருதி (செல்வ மகள்) சேமிப்புத் திட்டத்துக்கு 8.2 சதவீதம், 3 ஆண்டு நிரந்தர வைப்புக்கு 7.1 சதவீதம் வட்டி தொடரும். பொது வருங்கால வைப்பு நிதி, அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கு அடுத்த 3 மாதங்களுக்கான வட்டி விகிதம் முறையே 7.1 சதவீதம், 4 சதவீதமாகத் தொடரும். கிஸான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாகவும், தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கு 7.7 சதவீதமாகவும் வட்டி இருக்கும். மாதம்தோறும் வட்டி வருவாய் தரும் நிரந்தர வைப்புத் திட்டங்களுக்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2023-24 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதம் மாற்றப்பட்டது. அதன் பிறகு இப்போது வரை மாற்றமின்றி தொடா்கிறது.

summary

The government on Tuesday left interest rates unchanged for various small savings schemes, including PPF and NSC.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments