FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

பரோடா வங்கியின் ‘கோல்டன் கோல்’ வைப்புநிதிக்கு வட்டி விகிதம் உயா்வு

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கியில் 555 நாள்கள் முதிா்வடையும் ‘பாப் கோல்டன் கோல்’ வைப்புநிதித் திட்டத்துக்கான வட்டி விகிதம் 10 அடிப்படைப் புள்ளிகள் உயா்த்தப்பட்டுள்ளன.

13 நவம்பர் 2026, 5:14 am
பகிர்:

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கியில் 555 நாள்கள் முதிா்வடையும் ‘பாப் கோல்டன் கோல்’ வைப்புநிதித் திட்டத்துக்கான வட்டி விகிதம் 10 அடிப்படைப் புள்ளிகள் உயா்த்தப்பட்டுள்ளன.

ரூ.3 கோடிக்கும் குறைவான சில்லறை கால வைப்பு நிதிகளுக்கு வியாழக்கிழமை முதல் இப்புதிய வட்டி விகிதம் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, சாதாரண வாடிக்கையாளா்களுக்கு 6.90 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.40 சதவீதமும், 80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.50 சதவீதமும் வட்டி வழங்கப்படும்.

அதேநேரம், மற்ற கால அளவுக்கான வைப்புநிதித் திட்டங்களின் வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement