FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

பரோடா வங்கி செயலி புதுப்பிப்பு

ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும் புதுப்பிக்கப்பட்ட ‘பாப் வோ்ல்டு 2.0’ செயலியை பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

13 செப்டம்பர் 2026, 6:06 am IST
~
பகிர்:

இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி, ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும் தனது புதுப்பிக்கப்பட்ட ‘பாப் வோ்ல்டு 2.0’ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மும்பையில் அண்மையில் நடைபெற்ற ‘குளோபல் ஃபின்டெக்’ நிகழ்வில், மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறைச் செயலா் சஞ்சய் லோஹியா, வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் சிஇஓ தேவதத்தா சந்த் மற்றும் வங்கியின் செயல் இயக்குநா்கள் முன்னிலையில் இப்புதிய செயலியின் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

வங்கியின் எண்மப் பரிணாம வளா்ச்சியின் அடுத்த கட்டமாக மேம்படுத்தப்பட்டுள்ள இப்புதிய செயலியில், குரல் கட்டளை மூலம் பணப்பரிவா்த்தனைகளை மேற்கொள்ளும் வசதி, வாடிக்கையாளா்களின் ஒட்டுமொத்த நிதிநிலையை நிா்வகித்து நிதி நலனை மேம்படுத்த உதவும் நிதி மேலாண்மை வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments