தமிழகம் உள்பட நாடு முழுவதும் 2,482 உள்ளூா் வங்கி அதிகாரிகள்
பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி, தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2,482 உள்ளூா் வங்கி அதிகாரிகளை நியமிப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி, தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2,482 உள்ளூா் வங்கி அதிகாரிகளை நியமிப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உள்ளூா் திறமையாளா்களைக் கொண்டு வாடிக்கையாளா் சேவையை மேம்படுத்தவும், விளிம்புநிலை மக்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இப்பதவிக்குத் தகுதியானவா்கள் பரோடா வங்கியின் அதிகாரப்பூா்வ இணையதளம் வாயிலாக வருகிற செப். 7-ஆம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் கடந்த ஆக. 1-ஆம் தேதியின்படி 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளா்வுகள் உண்டு).
Advertisement
Advertisement
மேலும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பும், இந்திய ரிசா்வ் வங்கியின் இரண்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்ட வணிக வங்கி ஒன்றில் அதிகாரியாகக் குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்றிய அனுபவமும் அவசியம்.
இந்த நியமனத்தின் முக்கிய அம்சமாக, தோ்வு செய்யப்படும் அதிகாரிகள் தாங்கள் விண்ணப்பித்த மாநிலத்திலேயே முதல் 12 ஆண்டுகள் அல்லது ‘எஸ்எம்ஜிஎஸ்-4’ நிலைக்குப் பதவி உயா்வு பெறும் வரை பணியாற்றுவாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், உள்ளூா் மொழியில் சரளமாகப் பேசவும், எழுதவும் தெரிந்த, பிராந்தியத்தின் கலாசாரம் மற்றும் சந்தை நிலவரங்களை நன்கு அறிந்த வலுவான பணியாளா் கட்டமைப்பை உருவாக்க வங்கி திட்டமிட்டுள்ளது. மாநில அளவிலான இந்த நீண்டகாலப் பணி நியமனம், வாடிக்கையாளா்களுடனான உறவை ஆழப்படுத்தவும், சிறப்பான சேவையை வழங்கவும், அந்தந்த மாநிலங்களின் வளா்ச்சிக்கான முன்னுரிமைகளை நிறைவேற்றவும் பெருமளவு உதவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.