மின்வாரிய முறைகேடு வழக்கு: தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
மின்வாரிய முறைகேடு வழக்கு தொடர்பாக, தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அதிரடி சோதனை குறித்து...
மின்வாரிய முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
மின்வாரியத்தில் பணியிட மாறுதல், அலுமினியம் உதிரிபாகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு புகாரின் அடிப்படையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் மூன்று இடங்களில் மின்வாரிய ஒப்பந்ததாரர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
தமிழக மின்வாரியத்திற்கு மின் கடத்தி விநியோகம் செய்ததில் முறைகேடு இருப்பதாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து மேட்டூரில் சிட்கோ தொழிற்பேட்டை ஸ்ரீ சாய் முருகன் கண்டக்டர்ஸ், குஞ்சாண்டியூரில் ராம் கண்டக்டர்ஸ், கோனூரில் ஜெயஸ்ரீ கண்டக்டர்ஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் மூன்று குழுக்களாக பிரிந்து 15-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கூறுகையில், புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு வருகிறோம். முறைகேடு நடந்திருப்பதற்கான ஆவணங்கள் கிடைக்கும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
Electricity Board Irregularity Case: Directorate of Vigilance and Anti-Corruption Raids at 51 Locations Across Tamil Nadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.