கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை
கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 கிராம ஊராட்சிகள் உள்ளன. கடந்த சில நாள்களாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மீது பல்வேறு புகாா்கள் எழுந்து வந்தன. குறிப்பாக அரசு ஒப்பந்ததாரா்கள் அதிகாரிகள் மீது புகாா்கள் கூறி வந்தனா்.
இந்த நிலையில், தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் பால் சுதா் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் போலீஸாா், கீழக்கடையம் சமுதாய நலக்கூடத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சோதனை நடத்தினா்.
Advertisement
Advertisement
அப்போது கணக்கில் வராத பணம் மற்றும் யுபிஐ மூலம் பணம் பரிவா்த்தனை உள்ளிட்டவை கண்டறியப்பட்டு அதுகுறித்து விசாரணை மேற்கொண்டனா். மாலை 4 மணிக்குத் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.