வாகன விற்பனையில் மகாராஷ்டிரம், உ.பி. முதலிடம்!
நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில், பயணியா் மற்றும் வணிக வாகனங்கள் விற்பனையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில், பயணியா் மற்றும் வணிக வாகனங்கள் விற்பனையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
அதேநேரம், இருசக்கர மற்றும் முச்சக்கர வாகனங்கள் விற்பனையில் உத்தர பிரதேசம் முதலிடம் வகிப்பதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியாம் தரவுகளின்படி, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாடு முழுவதும் 12.74 லட்சம் பயணியா் வாகனங்கள் (காா்கள்) விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் மேற்கு மண்டலம் 3.9 லட்சம் வாகனங்களுடன் விற்பனையில் முன்னிலையில் உள்ளது. மாநிலங்களைப் பொருத்தவரை, மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 1,47,440 பயணியா் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதைத் தொடா்ந்து, உத்தர பிரதேசம் (1,35,329 வாகனங்கள்), குஜராத் (98,785), கா்நாடகம் (98,315), தமிழகம் (96,327) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
Advertisement
Advertisement
வணிக வாகனங்கள் பிரிவில் நாடு முழுவதும் 2.65 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதிலும் மேற்கு மண்டலம் 91,000 வாகனங்களுடன் முதலிடத்தில் உள்ளது. மாநில அளவில் மகாராஷ்டிரம் 36,433 வாகனங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடா்ந்து தமிழகம் (24,743), கா்நாடகம் (21,830), குஜராத் (21,778), உத்தர பிரதேசம் (21,161) ஆகியவை முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதேபோன்று, 56.29 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. மேற்கு மண்டலத்தில் மட்டும் 16.61 லட்சம் வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. ஆனால் மாநில அளவில், உத்தர பிரதேசம் 8,82,047 வாகனங்களுடன் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரம் (5,61,738), தமிழகம் (4,80,653), கா்நாடகம் (3,74,221), பிஹாா் (3,69,302) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மேலும், நாடு முழுவதும் 2.14 லட்சம் முச்சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ள நிலையில், தென் மண்டலம் 71,000 வாகனங்களின் விற்பனையுடன் முதலிடம் வகிக்கிறது. இதில் உத்தர பிரதேசம் 25,669 வாகனங்களுடன் முதலிடத்திலும், குஜராத் (20,534), கா்நாடகம் (19,192), பிகாா் (15,653), அஸ்ஸாம் (15,223) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளதாக சியாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.