FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

விற்பனையில் மாருதி சுசூகி முதலிடம்! 6 மாதங்களில் 1.26 லட்சம் கார்கள்!

பயணியர் வாகன விற்பனையில் மாருதி சுசூகி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது குறித்து...

Updated On : 29 ஜூலை 2026, 5:15 pm IST
மாருதி சுசூகி டிசைர் - படம் / நன்றி - மாருதி சுசூகி
பகிர்:

பயணியர் வாகன விற்பனையில் மாருதி சுசூகி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த அரை ஆண்டில் மட்டும் 1,26,204 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 96,101 கார்கள் விற்பனையாகி இருந்தன. அதாவது இந்த அரையாண்டில் 31% கார்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன.

மாருதி சுசூகியின் டிசைர் கார் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்ட பயணியர் வாகனமாக உள்ளது.

Advertisement

Advertisement

ஏனெனில் இதன் மைலேஜ் மற்றும் விலையே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. பெட்ரோல் மூலம் ஒரு லிட்டருக்கு 24 கி.மீ. மைலேஜ் தருகிறது. சிஎன்ஜி எரிபொருள் மூலம் இயக்கும்போது 33 கி.மீ. வரை மைலேஜ் தருகிறது. இதனால், வணிக ரீதியாக அதிகம் விற்பனையாகும் பயணியர் வாகனமாக டிசையர் உள்ளது.

இதுமட்டுமின்றி சென்னையில் இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 7 - 11 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சிஎன்ஜி வேரியண்ட் கார் விலை ரூ. 9.53 லட்சம் முதல் 10.69 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி டிசைர் காருக்குப் பிறகு டாடா பஞ்ச் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அரை ஆண்டில் மட்டும் 1,19,303 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட 41% அதிகம் என டாடா குறிப்பிடுகிறது.

டாடாவின் உறுதியான வடிவமைப்பு மற்றும் பட்ஜெட் விலையே விற்பனை அதிகரிப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதன் விலை ரூ. 5.70 லட்சம் முதல் ரூ.10.67 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் லிட்டருக்கு 20 கி.மீ. வரையும், சிஎன்ஜி வாயுவில் 26 கி.மீ. வரையும் மைலேஜ் தரக்கூடியது.

summary

Maruti Suzuki tops sales 1.26 lakh cars in 6 months

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments