தில்லியில் கார்கள் மோதல்: இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உட்பட 6 பேர் காயம்!
தில்லியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து பற்றி...
தில்லியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.
மத்திய தில்லியின் பி.டபிள்யூ.டி அலுவலகம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், கிராரி தொகுதி எம்.எல்.ஏ அனில் ஜா உட்பட இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆறு பேர் லேசான காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில், லட்சுமி நகரிலிருந்து ஐ.டி.ஓ நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், சாலையின் தடுப்பில் மோதி, இரும்பு வேலியைத் தாண்டி எதிரே வந்த மற்றொரு கார்(இன்னோவா) மீது மோதியது.
விபத்து ஏற்படுத்திய காரை 32 வயதான அசுதோஷ் பாண்டே என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி மற்றும் இரு சிறு குழந்தைகளும் பயணித்துள்ளனர். இன்னோவா காரில் எம்.எல்.ஏ அனில் ஜா மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ அபய் பாட்டீல் ஆகியோர் இருந்துள்ளனர். விபத்தில் காரில் இருந்த அனைவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்குக் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.
Advertisement
Advertisement
அனைவரும் தற்போது நலமுடன் இருப்பதாகக் போலீஸார் தெரிவித்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சேதமடைந்த இரண்டு கார்களையும் மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், கார் முதலில் தடுப்பில் மோதி, பின்னர் சாலையோர வேலியைத் தாண்டி ஐ.டி.ஓ-விலிருந்து லட்சுமி நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த இன்னோவா கார் மீது மோதியது தெரியவந்துள்ளது. விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Two MLAs, including Anil Jha, the sitting MLA from Kirari, were among six people who sustained minor injuries after two cars collided near the PWD office in central Delhi on Saturday night, police said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.