FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

புதுச்சத்திரம் அருகே அரசு பேருந்து ஓட்டுநா் உட்பட இரண்டு போ் கொலை!

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 2:14 am IST
கொலை... - file photo
பகிர்:

கடலூா் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே மா்ம நபா்களால் அரசு பேருந்து ஒட்டுனா் உள்பட இருவா் திங்கள்கிழமை இரவு வெட்டி கொலை செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் காவல் சரகத்தில் உள்ள பால்வாத்துன்னான் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (43), அரசு பேருந்து ஓட்டுநா். இவா் நேற்று மாலை தனது உறவினரான அதே கிராமத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (37) என்பவருடன் அக்கிராமத்தில் உள்ள கோவில் வளாகத்தில் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தனா்.

அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த ம்ர கும்பல் ஒன்று, இருவரையும் கத்தியால் சராமரியாக வெட்டி விட்டு தலைமறைவானது. இச்ச்சம்பவத்தில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

ராமகிருஷ்ணன் தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாா். புதுச்சத்திரம் போலீசாா் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments