முகப்பு
இந்தியா

கர்நாடகாவில் கோர விபத்து: லாரி - எம்யுவி வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலி; 2 பேர் காயம்

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 7 பேர் பலியானது தொடர்பாக...

Updated On : 9 ஜூலை 2026, 11:31 am IST
கர்நாடகாவில் கோர விபத்து: லாரி - எம்யுவி வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலி - கோப்புப்படம்
பகிர்:

யெல்லாப்பூர்: கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 7 பேர் பலியாகினர்; 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் யெல்லாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை-52-ல் உள்ள அரபியில் காட் பகுதி பாலகாரா கிராஸ் அருகே வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் லாரியும் - எம்யுவி (பல்நோக்கு) வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுலா வாகனத்தில் பயணம் செய்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த யெல்லாப்பூர் போலீசார், பலியானவர்களின் உடல்களை மீட்டு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

Advertisement

காயமடைந்த 2 பேரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் ஹூப்பள்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தார்வாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் உள்பட 9 பேர் கொண்ட குழுவினர் எம்யுவி வாகனத்தில் தர்மஸ்தலா மற்றும் சிக்கமகளூரு ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

வாகனத்தை உணவு விநியோகச் சேவை நிறுவனம் ஒன்றில் பகுதிநேர பணியாளராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் என்பது ஓட்டு வந்துள்ளார்.

ஓட்டுநர் சஞ்சீவ், வாகனத்தை அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டிச் சென்று, சாலையின் வலதுபுறம் அதிவேகத்தில் திரும்பியதால், அங்கோலாவிலிருந்து வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் எம்யுவி வாகனம் முற்றிலும் சேதமடைந்தது.

விபத்தில் காயமடைந்து உயிர் பிழைத்த சிவராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், பிஎன்எஸ் பிரிவுகள் 281 (பொதுச் சாலையில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல்), 125(2) (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் - கடுமையான காயம்) மற்றும் 106(1) (கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

summary

Seven people were killed and two others seriously injured after a multi-utility vehicle collided head-on with a lorry in Uttara Kannada district in the early hours of Thursday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments