பொள்ளாச்சி அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி
பொள்ளாச்சி அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது தொடர்பாக...
பொள்ளாச்சி அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனபால் என்பவர் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தனபால் மற்றும் அவரது மனைவி மேனகா, மகள் கனிஷ்கா மற்றும் உறவினர் சினேகா உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், பலத்த காயங்களுடன் இருந்த சுஜித் என்ற 12 வயது சிறுவனை மீட்ட காவல் துறையினர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து நெகமம் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Four people were killed in a headon collision between a car and a lorry near Pollachi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.