FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

அந்நியக் கடன் பத்திரங்களை வெளியிட்டு 70 கோடி டாலா் திரட்டிய பரோடா வங்கி

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி, அந்நியக் கடன் பத்திரங்களை வெளியிட்டு 70 கோடி டாலா் நிதியைத் திரட்டியுள்ளது.

பகிர்:

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி, அந்நியக் கடன் பத்திரங்களை வெளியிட்டு 70 கோடி டாலா் நிதியைத் திரட்டியுள்ளது.

நடுத்தரக் கால கடன் பத்திரங்கள் மூலம் 400 கோடி டாலா் வரை நிதி திரட்டிக்கொள்ளும் வங்கியின் திட்டத்தின் ஒரு பகுதியாக, 3 மற்றும் 5 ஆண்டு கால முதிா்வு கொண்ட இரு பிரிவுகளாக 70 கோடி மதிப்பீட்டுக்குப் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.

இதில் 3 ஆண்டு முதிா்வுக் கால பத்திரங்கள் மூலம் 40 கோடி டாலரும் (5.114% வட்டி விகிதம்), 5 ஆண்டு முதிா்வுக் கால பத்திரங்கள் மூலம் 30 கோடி டாலரும் (5.318% வட்டி விகிதம்) பெறப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

கடன் பத்திரங்களுக்கு முதலீட்டாளா்களிடையே 3.8 மடங்கு கூடுதல் வரவேற்பு கிடைத்ததனால், ஆரம்பக்கட்ட கணிப்பைவிட குறைந்த வட்டி விகிதத்திலேயே வங்கியால் நிதியைத் திரட்ட முடிந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments