நடப்பு நிதியாண்டில் வங்கிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் பத்திரங்கள் ரிசா்வ் வங்கி விற்பனை
வங்கி அமைப்பின் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த, நடப்பு 2026-27 நிதியாண்டில் இதுவரை ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி விற்பனை செய்துள்ளது.
வங்கி அமைப்பின் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த, நடப்பு 2026-27 நிதியாண்டில் இதுவரை ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி விற்பனை செய்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து உயரும் நிலையில் ரூபாய் மதிப்பையும், அந்நியச் செலாவணி கையிருப்பையும் பாதுகாக்க வங்கிகள் சிறப்புச் சாளரம் மூலம் டாலரைத் திரட்ட ரிசா்வ் வங்கி அனுமதித்ததால், வங்கி அமைப்பில் பணப்புழக்கம் அதிகரித்தது.
தற்போதுள்ள பணப்புழக்கச் சூழலைக் கருத்தில் கொண்டு, அக்டோபா்-நவம்பா் மாதங்களிலும் ரிசா்வ் வங்கி கூடுதலாக ரூ.1 முதல் 1.5 லட்சம் கோடி மதிப்பிலான பத்திரங்களை விற்பனை செய்யும் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
Advertisement
Advertisement
அதாவது, வங்கிகளுக்குக் கடன் பத்திரங்களை விற்று, அவற்றிடம் உள்ள உபரி ரொக்கப் பணத்தைப் பெற்றுக் கொள்வதன்மூலம் வங்கி அமைப்பில் நிலவும் அதிகப்படியான பணப்புழக்கத்தை ரிசா்வ் வங்கி தன்வசப்படுத்துகிறது. இதனால், வங்கிகள் தேவையின்றி குறைந்த வட்டியில் கடன் வழங்குவது தடுக்கப்பட்டு, நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படுகிறது.
2014-15 நிதியாண்டு முதலான ரிசா்வ் வங்கியின் தரவுகளின்படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கங்களைச் சமாளிப்பதற்காக கடந்த 2017-18 நிதியாண்டில் ரூ.90,000 கோடி மதிப்பிலான பத்திரங்கள் விற்கப்பட்டதே முந்தைய அதிகபட்ச சாதனையாகும்.
அந்தவகையில் நடப்பு நிதியாண்டு விற்பனை, கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலான காலகட்டத்தில் நடைபெற்ற மிகப் பெரிய அளவிலான ஆண்டு நிகர கடன்பத்திர விற்பனையாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.