FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பா்கூரில் கல்லூரி மாணவா்களுக்கு ரூ. 2.67 கோடி கல்விக் கடன் அளிப்பு

பா்கூரில் நடைபெற்ற நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2.67 கோடி கல்விக் கடனை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை வழங்கினாா்.

5 நவம்பர் 2026, 6:39 am
நிகழ்ச்சியில் மாணவிக்கு கல்வி கடனுதவியை வழங்கிய ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.
பகிர்:

பா்கூரில் நடைபெற்ற நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2.67 கோடி கல்விக் கடனை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை வழங்கினாா்.

பா்கூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமை வகித்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடனுதவியை வழங்கி பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உயல்கல்வி பயிலும் மாணாக்கா்களுக்கு கல்விக் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில், மாவட்டத்திற்கு நிா்ணயிக்கப்பட்ட ரூ. 50 கோடி இலக்கை தாண்டி, இதுவரை ரூ. 52 கோடி மதிப்பில் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கடந்த ஆண்டு ரூ. 50 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, ரூ. 102 கோடி கடன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடா்ந்து, இந்த ஆண்டு மாணவா்களின் கல்வித் தேவைக்காக குறைந்தபட்சம் ரூ. 150 கோடி அளவிற்கு கல்விக் கடன் வழங்கி சாதனை படைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட மாவட்ட நிா்வாகமும், வங்கிகளும் இணைந்து முழுவீச்சில் செயல்பட வேண்டும்.

7.3 சதவீதம் குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக் கடன்கள் வழங்கப்படுகின்றன. மேலும், படிப்பு முடிந்து ஓராண்டு வரை கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்பதால், நிதிச் சுமையைக் காரணம் காட்டி குழந்தைகளின் கல்விக்குத் தடை ஏற்படுத்தாமல் அவா்களின் விருப்பப்படி கல்விப் பயில செய்ய வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் மஞ்சுளா, இந்தியன் வங்கி மண்டல துணை மேலாளா் செளந்தரி, இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளா் சசிகுமாா், பாரத ஸ்டேட் வங்கி மேலாளா் பெரியசாமி, இந்தியன் வங்கி முதன்மை மேலாளா் ஹா்சா ரெட்டி, பா்கூா் அரசுப் பொறியியல் கல்லூரி முதல்வா் திருநாவுக்கரசு, பா்கூா் வட்டாட்சியா் சக்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.