முகப்பு
தற்போதைய செய்திகள்

குஜராத் கலவரத்தால் இந்தியன் முஜாகிதீன் அமைப்பு உருவானது என்ற ஷகீல் அகமதின் கருத்து முட்டாள்தனமானது: பாஜக

ஷகீல் அகமதின் கருத்து முட்டாள்தனமானது மட்டுமின்றி கடும் கண்டனத்துக்கும் உரியது. இந்தியாவில் பயங்கரவாத சம்பவங்களை நிகழ்த்த வேண்டும் என்பதற்காகவே பாகிஸ்தானில் உள்ள அமைப்புகள்,

Updated On : 21 ஜூலை 2013, 7:07 pm IST
பகிர்:

குஜராத் கலவரத்தால் இந்தியன் முஜாகிதீன் அமைப்பு உருவானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமதின் கருத்து முட்டாள்தனமானது என்று பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக தில்லியில் அவர் மேலும் கூறியதாவது:

ஷகீல் அகமதின் கருத்து முட்டாள்தனமானது மட்டுமின்றி கடும் கண்டனத்துக்கும் உரியது. இந்தியாவில் பயங்கரவாத சம்பவங்களை நிகழ்த்த வேண்டும் என்பதற்காகவே பாகிஸ்தானில் உள்ள அமைப்புகள், இங்குள்ளவர்களைத் தூண்டி விட்டு வருகின்றனர். உண்மை நிலை இப்படி இருக்க, மதப் பிரச்னையை எழுப்பி அரசியல் ஆதாயம் அடையும் நோக்குடன் காங்கிரஸ் தலைவர் பேசி வருகிறார்.

Advertisement

Advertisement

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல், பொருளாதாரச் சீரழிவு, வேலைவாய்ப்பு இன்மை, விலைவாசி உயர்வு, திறமையற்ற நிர்வாகம் போன்ற மக்களைப் பாதித்துள்ள பிரச்னைகளுக்கு அவர்களிடமிருந்து பதில் இல்லை.

இந்தியாவில் "சிமி' அமைப்பு பல ஆண்டுகளாக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது. அந்த அமைப்பு தடை செய்யப்பட்டபின், இந்தியன் முஜாகிதீன் என்று பெயரில் செயல்படுகின்றனர். இவர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உண்டு என்பது அனைவரும் அறிந்தது. இந்த சூழ்நிலையில் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர் கருத்துக் கூறி வருகிறார். அரசியல் ஆதாயத்துக்காக உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டுவிடக் கூடாது என்றார் ரவிசங்கர் பிரசாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments