மம்தா ஒரு மதம் பிடித்த யானை: மத்திய அமைச்சர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
மேற்குவங்க மாநிலத்தில் இதுவரை மூன்று கட்ட பஞ்சாயத்து தேர்தல் முடிந்துள்ளன. கடந்த 7 நாட்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மத்திய அமைச்சர் அபு ஹசீம் சவுத்ரி மீது துப்பாக்கிச்சூடு சம்பவமும்
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:15 PM
மேற்குவங்க மாநிலத்தில் இதுவரை மூன்று கட்ட பஞ்சாயத்து தேர்தல் முடிந்துள்ளன. கடந்த 7 நாட்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மத்திய அமைச்சர் அபு ஹசீம் சவுத்ரி மீது துப்பாக்கிச்சூடு சம்பவமும் நடந்தது. இந்நிலையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய இணை அமைச்சர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், மம்தா ஒரு மதம் பிடித்த யானை. அவர் யாருக்கும் அடங்க மறுக்கிறார். ஆளும் கட்சியினை ஏவிவிட்டு காங்கிரஸ் கட்சியினரை கொலை செய்ய தூண்டுகிறார். என்னை கைது செய்யும் தைரியம் இருக்கிறதா ? என கூறியுள்ளார்.