காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி : 4 பயங்கரவாதிகள் பலி
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:16 PM
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை, ஹப்ருடா வனப்பகுதியில், ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தியதில், மிக பயங்கர ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இதில் ராணுவ வீரர்கள் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது என்று ராணுவ அதிகாரி கூறினார்.