முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரபல சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது.

ஜோலார்பேட்டை அடுத்த சின்னமூக்கனூர் சிலுப்பி வட்டத்தை சேர்ந்தவர் மகி(45). இவர் பலமுறை சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர். இந்நிலையில் கடந்த வாரம் சின்னமூக்கனூர் ஏரிப்பகுதியில் கள்ளசாரயம் விற்ற போது ஜோலார்பேட்டை போலீசார் கைது செய்து திருப்பத்தூர்

Updated On : 1 ஆகஸ்ட் 2013, 10:16 pm IST
பகிர்:

ஜோலார்பேட்டை அடுத்த சின்னமூக்கனூர் சிலுப்பி வட்டத்தை சேர்ந்தவர் மகி(45). இவர் பலமுறை சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர். இந்நிலையில் கடந்த வாரம் சின்னமூக்கனூர் ஏரிப்பகுதியில் கள்ளசாரயம் விற்ற போது ஜோலார்பேட்டை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து பலமுறை கள்ளசாராயம் விற்று வரும் மகியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையின் பேரில் மகியை குண்டர் சட்டத்தில் கைது செய்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.