விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை; டிராவில் முடிந்த நெதர்லாந்து - ஜப்பான் ஆட்டம்!
ஃபிஃபா உலகக் கோப்பையில் நெதர்லாந்து - ஜப்பான் இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.
ஃபிஃபா உலகக் கோப்பையில் நெதர்லாந்து - ஜப்பான் இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் டல்லாஸில் நேற்று (ஜூன் 14) நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் எஃப் பிரிவிலிருந்து நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் நெதர்லாந்து அணி இரண்டு முறை கோல் அடிக்க முயற்சி செய்தது. ஆனால், நெதர்லாந்து அணியின் முயற்சியை ஜப்பான் வெற்றிகரமாக தடுத்தது. கடினமான முதல் பாதிக்குப் பிறகு ஆட்டத்தின் இரண்டாம் பாதி தொடங்கியது.
Advertisement
Advertisement
இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அணிகள் தலா இரண்டு கோல்கள் அடித்தன. இந்த நான்கு கோல்களுமே ஆட்டத்தின் இரண்டாம் பாதியிலேயே அடிக்கப்பட்டது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் விர்ஜில் வான் டிஜிக் கோல் அடித்தார்.
அதன் பின், அடுத்த 7 நிமிடங்களுக்குப் பிறகு ஜப்பான் வீரர் கெய்ட்டோ நாகமுரா கோல் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதன் பின், நெதர்லாந்து வீரர் கிரைசென்சியோ கோல் அடிக்க, நெதர்லாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
அதன் பின், ஜப்பான் வீரர் டைச்சி கமடா கோல் அடிக்க ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
The match between the Netherlands and Japan at the FIFA World Cup ended in a draw.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.