மீன்சுருட்டி அருகே டிராக்டர் மோதி விவசாயி சாவு
மீன்சுருட்டி அருகே டிராக்டர் மோதியதில் விவசாயி உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம்,மீன்சுருட்டி அருகேயுள்ள மேலகஞ்சன்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி(52) இவர் புதன்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் அணைக்கரைக்குச் சென்று
மீன்சுருட்டி அருகே டிராக்டர் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம்,மீன்சுருட்டி அருகேயுள்ள மேலகஞ்சன்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி(52) இவர் புதன்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் அணைக்கரைக்குச் சென்று கொண்டடிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன்(32) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் குப்புசாமிó மீது மோதியது இதில் பலத்த காயமடைந்த குப்புசாமி கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
இது குறித்து குப்புசாமியின் உறவினர் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸபெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து தலைமறைவான பிரபாகரனை தேடிவருகிறார்.
Advertisement
Advertisement