லிபியாவில் முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை
லிபியாவின் முக்கிய நகரமான மிஸ்ரடாவில் உள்ள கிரிமினல் நீதிமன்றம், போர் குற்றங்களில் ஈடுபட்டதற்காக அந்நாட்டு முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.
லிபியாவின் முக்கிய நகரமான மிஸ்ரடாவில் உள்ள கிரிமினல் நீதிமன்றம், போர் குற்றங்களில் ஈடுபட்டதற்காக அந்நாட்டு முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது, பல்வேறு வகையில் வன்முறையைத் தூண்டியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மார் அல் கடாபியின் நெருங்கிய உறவினரும், அவரது அமைச்சரவையில் கல்வித் துறை அமைச்சராக இருந்தவருமான அகமது இப்ராஹிம், போர் நடவடிக்கைகளின் போது, பலரை தனிப்பட்ட முறையில் கடத்திக் கொலை செய்திருப்பதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement