முகப்பு
தற்போதைய செய்திகள்

பயங்கரவாத அச்சுறுத்தல் : ராமேஸ்வரம் கடல் பகுதியில் ரோந்து

தென்னிந்தியாவுக்குள் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக வந்த எச்சரிக்கையை அடுத்து ராமேஸ்வரம் கடல் பகுதியில் 6 இந்திய கடலோர காவல் படையின் கப்பல்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 1:15 pm IST
பகிர்:

தென்னிந்தியாவுக்குள் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக வந்த எச்சரிக்கையை அடுத்து ராமேஸ்வரம் கடல் பகுதியில் 6 இந்திய கடலோர காவல் படையின்  கப்பல்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 8 தீவிரவாதிகள் தமிழகத்தில் மதுரை அல்லது மயிலாடுதுறையில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் வகையில், இந்திய கடலோர காவல் படையின் இரண்டு ஹோபர் கிராப்ட், 2 சிறிய படகுகள், இரண்டு  பெரிய படகுகள் ஆகியவை தமிழக கடல் எல்லையில் ரோந்து சுற்றி வருகின்றன.

Advertisement

Advertisement

மேலும், பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால் 1093 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு காவல்துறைக்கு தகவல் தரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.