உலகளவில் இரண்டாமிடம்... ரஷியாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா!
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில், இந்தியா உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில், இந்தியா உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ரஷியாவிடமிருந்து கடந்த மே மாதம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா, ரஷியாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ரஷியாவிடமிருந்து கடந்த மாதம் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 63,000 கோடி அளவிற்கு ஹைட்ரோ கார்பன்கள் வாங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று குறித்த ஆராய்ச்சி மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 8% அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் படிப்படியாக 21% ஆக அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
இந்தியா முழுவதுமுள்ள சுத்திகரிப்பு மையங்களில் ரஷிய இறக்குமதி அதிகரித்துள்ளது பதிவாகியுள்ளது. குஜராத்திலுள்ள வதினார் சுத்திகரிப்பு மையத்தில் ஏப்ரல் மாதத்தை விட 36 % அதிகமாகவும், ஜாம்நகர் மையத்தில் 14% அதிகமாகவும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மாநில அரசுகளின் சுத்திகரிப்பு மையங்களும் தங்களின் கொள்முதலை அதிகரித்துள்ளன. புது மங்களூரு மற்றும் விசாகப்பட்டினம் மையங்கள் நவம்பர் 2025 முதல் கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய நிலையில் மார்ச் முதல் மீண்டும் கொள்முதலைத் தொடங்கியுள்ளனர்.
நியூ மங்களூரு மையம் 13% கொள்முதலை அதிகரித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் 42% அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் உள்ள பாரதீப் சுத்திகரிப்பு மையம் கடந்த 2 ஆண்டுகளில் அதிகளவு ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகத் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மோதலைத் தொடர்ந்து, மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக ரஷியாவிடமிருந்து அதிகளவு எண்ணெய் வாங்கும் நாடாக இந்தியா உள்ளது. இந்திய சுத்திகரிப்பு மையங்கள் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை சீராக அதிகரித்து, இறக்குமதி செலவுகளை நிர்வகிக்கவும் சுத்திகரிப்பு லாபத்தை மேம்படுத்தவும், எரிபொருள் ஏற்றுமதிக்கு ஆதரவு தரவும் உதவுகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய பல்வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்வது முக்கிய பங்கு வகிக்கிறது.
ரஷியாவிடமிருந்து அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. கடந்த மே மாதம் மட்டும் 50% அளவிலான கச்சா எண்ணெயை சீனா இறக்குமதி செய்துள்ள நிலையில், இந்தியா 36% இறக்குமதி செய்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் துருக்கி 6% மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் 5% உள்ளனர்.
India ranks second in the world among countries importing crude oil from Russia
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.