முகப்பு
தற்போதைய செய்திகள்

மெட்ராஸ் கபே படம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல: இளைஞர் காங்கிரஸ்

மெட்ராஸ் கபே திரைப்படத்தில் தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லை என்று இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர்

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 5:07 pm IST
பகிர்:

மெட்ராஸ் கபே திரைப்படத்தில் தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லை என்று இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் விஜய் இளஞ்செழியன் தெரிவித்தார்.

நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்துள்ள மெட்ராஸ் கபே படத்தில் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம், இலங்கையில் இந்திய அமைதிப்படையின் நடவடிக்கைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளதாகவும், அதில் தமிழர்கள் தேச விரோதிகள், பயங்கரவாதிகள் போல சித்திரிக்கப்பட்டுள்ளதாவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் இந்தப் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகளுக்கு இப்படத்தை அதன் தயாரிப்பாளர்கள் திரையிட்டு காண்பித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் விஜய் இளஞ்செழியன், பொதுச்செயலாளர் அனுராதா அபி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சென்னையில் மெட்ராஸ் கபே படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

அதன்பிறகு இப்படம் குறித்து விஜய் இளஞ்செழியனிடம் கேட்டபோது, மெட்ராஸ் கபே படத்தில் தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் எதுவும் இல்லை. மாறாக தமிழர்களை நல்லவிதமாகவே சித்திரித்துள்ளனர். அதனால் தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டி படம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.