முகப்பு
தற்போதைய செய்திகள்

கோதையாறு பாசன திட்ட அணைகளில் நீர் திறக்க முதல்வர் உத்தரவு

கன்னியாக்குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து செப்டம்பர் 3ம் தேதி முதல் தண்ணர் திறந்து விட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளது.

Updated On : 2 செப்டம்பர், 2013 at 10:30 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

கன்னியாக்குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து செப்டம்பர் 3ம் தேதி முதல் தண்ணர் திறந்து விட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து  கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்காக 3.9.2013 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

Advertisement

இதனால், திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திலுள்ள  பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுவதோடு, 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.