அமெரிக்க மருத்துவமனையில் சோனியாவுக்கு சம்மன் அளிப்பு
புது தில்லியில் 1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்தது. இது தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவர்களை சோனியா காந்தி காப்பாற்ற முயன்றதாக, அவர் மீது
அமெரிக்க மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, சீக்கிய உரிமைக்குழு தொடர்ந்த வழக்கில், அந்த நாட்டு நீதிமன்றம் இன்று சம்மன் வழங்கியது.
புது தில்லியில் 1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்தது. இது தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவர்களை சோனியா காந்தி காப்பாற்ற முயன்றதாக, அவர் மீது, அமெரிக்காவில் உள்ள சீக்கியர்களுக்கான மனித உரிமை அமைப்பு மற்றும் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இருவர் சார்பில், நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.இதனை விசாரித்த நீதிபதி பிரைன் எம்.கோகன், கடந்த 3ஆம் தேதி சோனியாவுக்கு சம்மன் வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில் சோனியா, நியூயார்க்கில் உள்ள ஸ்லோன்-கேட்டரிங் மெமோரியல் புற்று நோய் மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்கு சென்றிருந்தார்.
அவர்,இன்று புது தில்லி திரும்புவதற்கு முன் நீதிபதியின் உத்தரவின்படி செவ்வாய்க்கிழமை இரவு சம்மன் மற்றும் புகார் பிரதிகள் அவரிடம் நேரில் வழங்கப்பட்டது. பணியில் இருந்த செவிலியர்களின் மேற்பார்வையாளர் மூலம் இவை ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அமெரிக்க தலைவர் ஜார்ஜ் அபிரகாம் கூறுகையில்,"சீக்கியர்களுக்கான மனித உரிமை அமைப்பு தனிப்பட்ட முறையில் சோனியாவுக்கு தொந்தரவு தரும் கெட்ட உள்நோக்கோடு செயல்படுகிறது' என்றார்.
Advertisement
Advertisement