ஐநா சபை கூட்டம்: வங்கதேச பிரதமர் ஹசினா புறக்கணிப்பு
நியூயார்க்கில் நடைபெறும் ஐநா சபை கூட்டத்தை புறக்கணிக்க வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா முடிவு செய்துள்ளார்.வங்கதேசத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் நெருக்கடி மற்றும் அமெரிக்க அதிபர்
நியூயார்க்கில் நடைபெறும் ஐநா சபை கூட்டத்தை புறக்கணிக்க வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா முடிவு செய்துள்ளார்.வங்கதேசத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் நெருக்கடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யத் தவறியமை உள்ளிட்ட காரணங்களால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஆளும் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, தேர்தல் காரணமாக வங்க தேசத்தில் நிலவி வரும் அரசியல் நிச்சயமற்றத் தன்மை காரணமாகவும்,அடுத்த நாடாளுமன்ற கூட்டம் இன்று தொடங்க இருப்பதாலும் ஹசினா ஐநா சபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யாத காரணத்தால்தான் ஹசினா ஐநா சபை கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவை எடுத்ததாக வெளியுறவு வட்டாரங்கள் தெரிவித்தன.68-வது ஐநா சபை கூட்டத்திற்கு ஹசினா சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.