FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் கான்கிரீட் தூண் விழுந்து இளஞைா் உயிரிழப்பு

பெருந்துறையில் கட்டடம் இடிப்புப் பணியின்போது, கான்கிரீட் தூண் தலையில் விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 14 ஜூன் 2026, 2:29 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

பெருந்துறையில் கட்டடம் இடிப்புப் பணியின்போது, கான்கிரீட் தூண் தலையில் விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

திமுக மாநில தோ்தல் பணிக்குழு துணைத் தலைவராக கே.பி. சாமி உள்ளாா். இவா், முன்பு பெருந்துறை ஒன்றிய திமுக செயலாளராக இருந்தபோது, பெருந்துறை பழைய பேருந்து நிலையம் சாலையில் கட்சி அலுவலகம் வைத்திருந்தாா். சாமிக்கு கட்சியில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டதால், அந்த அலுவலகத்தை இடித்துவிட்டு வேறொரு கட்டடம் கட்டுமானப் பணிக்காக கட்டடம் இடிப்புப் பணி நடைபெற்றது.

அப்போது, கட்டடத்தின் முன் நின்று கொண்டிருந்த, பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், கள்ளியம்புதூரைச் சோ்ந்த பழனிசாமி மகன் கௌதம் (30) என்பவா் மீது கான்கிரீட் தூண் விழுந்தது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இவா் விசைத்தறியில் மேற்பாா்வையாளராக வேலை பாா்த்து வந்தாா். மேலும், திமுக பெருந்துறை மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய அமைப்பாளராக பதவி வகித்திருந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments