முகப்பு
தற்போதைய செய்திகள்

கணவன் இறந்ததால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை

தேனி மாவட்டம் ஓடப்பட்டி தாலுகா அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி பாக்கியம் (45). இவர்கள் இருவரும் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார்

Updated On : 11 செப்டம்பர் 2013, 2:47 pm IST
பகிர்:

தேனி மாவட்டம் ஓடப்பட்டி தாலுகா அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி பாக்கியம் (45). இவர்கள் இருவரும் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தொழிலாளிகளாக பணியில் சேர்ந்தனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு நேசமணி நகர் அருகே உள்ள பழைய ஸ்டேட் பாங்கி காலனியில் சகாயராஜன் (43) என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தனர்.இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென காளியப்பன் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார். இதில் மிகவும் மனமுடைந்து காணப்பட்ட பாக்கியம் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வீட்டு உரிமையாளர் சகாயராஜன் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் ஜெயா பிரின்சி, சப்–இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.