முகப்பு
தற்போதைய செய்திகள்

கால்நடை ஆய்வாளருக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்

2011-2012ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டு கால்நடை ஆய்வாளர் பயிற்சி முடித்த 289 பேர்களுக்கு கால்நடை ஆய்வாளர் நிலை-2க்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

Updated On : 11 செப்டம்பர் 2013, 3:39 pm IST
பகிர்:

2011-2012ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டு  கால்நடை ஆய்வாளர் பயிற்சி முடித்த 289 பேர்களுக்கு கால்நடை ஆய்வாளர் நிலை-2க்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் கால்நடை மருத்துவ வசதிகளைப் பெரிதும் மேம்படுத்துவதற்கு பல செம்மையான திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.  கால்நடை பராமரிப்புத் துறை, தமிழகத்திலுள்ள அனைத்து கால்நடைகளுக்கும் மருத்துவ சிகிச்சை மற்றும் மேம்பட்ட பராமரிப்பு முறை சேவைகளை கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைகள் மூலம் வழங்கி வருகிறது.

மேலும், கால்நடை கிளை நிலையங்களில் செயற்கை முறை கருவூட்டல் மற்றும் முதலுதவி சேவைகள்  கால்நடை ஆய்வாளர்கள் மூலம் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.  கிராமப்புற ஏழை எளிய மக்களின் கால்நடைகளுக்கு கள அளவில் நோய் தடுப்பு பணிகளை ஆற்றிடும் வகையில்  2011-2012ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டு  கால்நடை ஆய்வாளர் பயிற்சி முடித்த 289  பேர்களுக்கு கால்நடை ஆய்வாளர் நிலை-2க்கான பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.