பலாத்காரத்துக்கு சட்டப்படி ஆயுள் தண்டனைதான் : குற்றவாளிகள் தரப்பு வாதம்
பலாத்காரத்துக்கு சட்டப்படி ஆயுள் தண்டனை தான் விதிக்கப்பட வேண்டும். மரண தண்டனை என்பது அதிகப்படியான தண்டனை என்று தில்லி மாணவி பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் தரப்பு வழக்குரைஞர் வாதாடினார்.
பலாத்காரத்துக்கு சட்டப்படி ஆயுள் தண்டனை தான் விதிக்கப்பட வேண்டும். மரண தண்டனை என்பது அதிகப்படியான தண்டனை என்று தில்லி மாணவி பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் தரப்பு வழக்குரைஞர் வாதாடினார்.
குற்றவாளிகள் தரப்பில் வாதாடிய வழக்குரைஞர், இவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுவதன் மூலம், பெண்களுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதாக மத்திய அரசு காட்ட விரும்புகிறது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது. அவர்கள் படிப்பறிவில்லாத இளைஞர்கள். சிலர் மது போதையில் இருந்துள்ளனர். இவர்கள் திருந்தி வாழ வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கூறினர்.
மேலும், பலாத்கார குற்றத்துக்கு சட்டப்படி ஆயுள் தண்டனைதான் விதிக்கப்பட வேண்டும். மரண தண்டனை என்பது அதிகப்படியான தண்டனையாகும் என்றும் வாதாடினர்.
Advertisement
Advertisement