புதிய கட்டண அட்டை மீட்டரை திருத்தம் செய்ய அக்டோபர் 15 வரை அவகாசம்
இதன்படி முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கான ஆட்டோ கட்டணம் ரூ.25 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கிலோ மீட்டருக்கு கட்டணம் 12 ரூபாய் ஆகும்.இரவு 11 மணி
சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு புதிய கட்டண விகிதத்தை நிர்ணயித்து முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதன்படி முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கான ஆட்டோ கட்டணம் ரூ.25 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கிலோ மீட்டருக்கு கட்டணம் 12 ரூபாய் ஆகும்.இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செய்யும் பயணத்துக்கு கூடுதலாக 50 சதவீதம் இரவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.காத்திருப்பு கட்டணம் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு 3 ரூபாய் 50 காசு வீதம் 1 மணி நேரத்துக்கு 42 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த கட்டணம் கடந்த 25–ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய அடுத்த மாதம் (அக்டோபர்) 15–ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement