முகப்பு
தற்போதைய செய்திகள்

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 3 பேருக்கு மூன்று ஆண்டு சிறை

சென்னையில் உள்ள போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2.7.2008-ஆம் தேதி ரோந்து சென்றனர். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் டேராடூன் விரைவு ரயிலில் கஞ்சா

Updated On : 11 செப்டம்பர் 2013, 6:48 pm IST
பகிர்:

ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 3 பேருக்கு, சென்னைஉயர்நீதி மன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

சென்னையில் உள்ள போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2.7.2008-ஆம் தேதி ரோந்து சென்றனர். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் டேராடூன் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருவெற்றியூர் ரயில் நிலையத்திற்குச் சென்று போலீஸார் ஆய்வு செய்தனர்.அப்போது 64 கிலோ அளவில் கஞ்சா கடத்திக்கொண்டு அந்த ரயிலில் வந்து இறங்கிய சென்னையைச் சேர்ந்த பாண்டியராஜன்(32),சேதுராமன்(31),ஜெயப்பிரகாஷ்(19) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் நீதிபதி வி.ராமமூர்த்தி முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி,கஞ்சா கடத்திய பாண்டியராஜன்,சேதுராமன்,ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும்,தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து,புதன் கிழமை தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் டி.கண்ணன் ஆஜரானார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.