முகப்பு
தற்போதைய செய்திகள்

செங்குன்றம் அருகே ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த ரெட்டைஏரி பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செங்குன்றம் வனச் சரகர் மதன்குமாருக்கு தகவல் கிடைத்தது.

Updated On : 10 ஆகஸ்ட் 2013, 2:58 pm IST
பகிர்:

செங்குன்றம் அருகே தனியார் நிலத்தில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த ரூ. லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை செங்குன்றம் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த ரெட்டைஏரி பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செங்குன்றம் வனச் சரகர் மதன்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி மாதவரம் போலீஸாருடன் செங்குன்றம் வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது தனியார் நிலத்தில் 250 கிலோ எடை கொண்ட ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து செங்குன்றம் வனத்துறையினர் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்து அதை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.