கடையில் தகராறு செய்த 2 பேர் மீது வழக்கு
ஒசூரி தாலுக்கா அலுவலக சாலையில் உள்ள கடையில் தகராறில் ஈடுபட்டதாக 2 பேர் மீது ஒசூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.
ஒசூரி தாலுக்கா அலுவலக சாலையில் உள்ள கடையில் தகராறில் ஈடுபட்டதாக 2 பேர் மீது ஒசூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.
ஒசூர் இமாம்பாடா பகுதியைச் சேர்ந்தவர் பக்ருதீன்(28). இவர் தாலுக்கா அலுவலக சாலையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் சனிக்கிழமை அண்ணா நகரைச் சேர்ந்த முருகைய்யா மற்றும் பாலன் ஆகிய இருவரும் பொருள்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காவில்லையாம். பணத்தை கேட்ட பக்ருதீனை கொலை செய்து விடுவதாக மிரட்டி தலையில் கல்லால் தாக்கியுள்ளனர்.
படுகாயம் அடைந்த பக்ருதீன் ஒசூர் அரசு மருத்துனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து ஒசூர் நகர காவல நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் பேரில் முருகைய்யா மற்றும் பாலன் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிந்து போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.