ஓட்டுநர் உரிமம் பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி விதியை ரத்து செய்ய வலியுறுத்தல்
பாரதீய ஆட்டோ ஓட்டுநர் சங்க கூட்டம் அண்மையில் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலர் எம். செளந்தரராஜன் தலைமை வகித்தார்.கூட்டத்தில், ஆட்டோ, வேன் மற்றும்
ஆட்டோ, வேன் மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம் பெற 8-ம வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியை தமிழக அரசு ரத்த செய்ய ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாரதீய ஆட்டோ ஓட்டுநர் சங்க கூட்டம் அண்மையில் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலர் எம். செளந்தரராஜன் தலைமை வகித்தார்.கூட்டத்தில், ஆட்டோ, வேன் மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுநர் உரிமம் பெற அரசு விதித்துள்ள 8-ம் வகுப்பு தேர்ச்சி என்ற நிபந்தனையை உடனடியாக ரத்து செய்து, கல்வி அறிவை மட்டும் புகுத்தாமல், திறமையின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும். தமிழக அரசு ஓட்டுநர்களுக்கு ஓய்வூதியமாக ரூ. 3 ஆயிரம், இயற்கை மரண உதவித் தொகையாக ரூ. ஒரு லட்சம், விபத்து மரண உதவித் தொகையாக ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்கத் துணைத் தலைவர் கே. அன்பழகன், பொருளாளர் ஆர். சந்திரசேகரன், செயலர் பி. சுப்பிரமணி, பொதுச் செயலர் நாகராஜ், கே. கனகராஜ், ஜெமினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement