சாலையை கடந்த பெண் கார் மோதி சாவு
கார்ணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மரகதவள்ளி (36). இவர் தனது 4 வயது ஆண் குழந்தையுடன் அப்பகுதி சாலையை புதன்கிழமை இரவு கடந்தார். அப்போது அவ்வழியாக வேகமாகச் சென்ற கார் மோதியது.
திருவலம் அருகே சாலையை கடந்த பெண் கார் மோதி அதே இடத்தில் உயிரிழந்தார்.
கார்ணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மரகதவள்ளி (36). இவர் தனது 4 வயது ஆண் குழந்தையுடன் அப்பகுதி சாலையை புதன்கிழமை இரவு கடந்தார். அப்போது அவ்வழியாக வேகமாகச் சென்ற கார் மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே மரகதவள்ளி இறந்தார்.காயமடைந்த குழந்தை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது. திருவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.