காவல் பெண் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்த ஓட்டல் உரிமையாளர் கைது
காவல் பெண் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்த ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல் பெண் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்த ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார்குடியைச் சேர்ந்த ராஜா என்கிற இளையராஜா ஓட்டல் வைத்துள்ளார். இரவு நேரத்தில் கடையில் வியாபாரம் இருந்துள்ள நிலையில், இரவு வெகு நேரம் கடை திறந்திருக்கக் கூடாது என மன்னார்குடி காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் சந்தானமேரி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தனது வியாபாரத்துக்கு இடையூறாக இருப்பதாக அவர் பதிலுக்கு திட்டினாராம். இதை அடுத்து சந்தான மேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.