போலீஸுடன் கள்ளத் தொடர்பில் இருந்து கொலை செய்யப்பட்ட பெண் மைனர்: தாய் புகார்
காஞ்சிபுரம் நாகலூத்து தெருவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த இளம்பெண் ரம்யா கடந்த ஜூன் 1-ம் தேதி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது குறி்த்து தகவல் அறிந்த விஷ்ணு காஞ்சி போலீஸார் வழக்குப்பதிவு
போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளருடன் கள்ளத் தொடர்பில் இருந்து அண்மையில் கொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண் 16 வயதே நிரம்பிய மைனர் என அப்பெண்ணின் தாயார் புகார் செய்துள்ளார்.
காஞ்சிபுரம் நாகலூத்து தெருவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த இளம்பெண் ரம்யா கடந்த ஜூன் 1-ம் தேதி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது குறி்த்து தகவல் அறிந்த விஷ்ணு காஞ்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், ஒரகடம் போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் வேல்முருகனின் மகன் ரஞ்சிக்குமார் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் ரம்யாவின் செல்போனை போலீஸார் சோதனை செய்தபோது, அதில் ஒரகடம் போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் வேல்முருகனோடு அதிக தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்துதான் சிறப்பு உதவி ஆய்வாளர் வேல்முருகனுக்கும், அந்த இளம் பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும், அவர்தான் நாகலூத்து தெருவில் வீடு எடுத்து தங்க வைத்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரஞ்சித்குமாரை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர். மேலும் போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் வேல்முருகனை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, உத்தரமேரூரை அடுத்த வேடபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவரும், கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் தாயுமான அஞ்சலம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: கொலை செய்யப்பட்ட எனது மகள் பெயர் ரம்யா (எ) ரமணி. இவர் 1996 டிசம்பர் 6-ம் தேதி சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் பிறந்தார். இப்போதுதான் எனது மகளுக்கு 16 வயது நிறைவடைந்துள்ளது. வேலை வாங்கித் தருவதாக எனது மகளை அழைத்துச் சென்ற போலீஸ் வேல்முருகன், அவளிடம் ஆசை வார்த்தைக் கூறி கர்ப்பமாக்கியுள்ளார். மகள் கொலை செய்யப்பட்ட அன்றே போலீஸார் என்னை காஞ்சிபுரத்துக்கு வரவழைத்து, மகள் கொலை செய்யப்பட்டது குறித்து கூறினர். ஆனால் அவள் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து மறுநாள் செய்திதாள்களைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.
ஆனால் போலீஸார் எப்.ஐ.ஆரில் எனது மகளின் வயதை 20 என தவறாக குறிப்பிட்டுள்ளனர். இதுநாள் வரை எனது மகளின் வயது குறித்து என்னிடம் விசாரிக்கவே இல்லை. எனது மைனர் மகளை கற்பழித்து கொலை செய்த போலீஸ் வேல்முருகன் உள்ளிட்ட நபர்கள் மீது உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகளின் செல்போனை ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தரமேரூர் வட்டக்குழு செயலாளர் சொ. பாஸ்கரனும் புகார் மனு அளித்துள்ளார்.