முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ. 1 கோடி வரை கடன்
இந்தத் திட்டத்தின் மூலம் ரூ. 5 லட்சம் முதல் ரூ. ஒரு கோடி வரை கடனுதவி 25 சதவீத மானியத்துடன் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் மானியம் பெறலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை
முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ. ஒரு கோடி வரை கடன் வழங்கப்படுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.
கரூரில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் குறித்த இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான தகவல் பரப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கில் அவர் மேலும் பேசியதாவது:
இந்தத் திட்டத்தின் மூலம் ரூ. 5 லட்சம் முதல் ரூ. ஒரு கோடி வரை கடனுதவி 25 சதவீத மானியத்துடன் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் மானியம் பெறலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டப் பயனாளிகள் எண்ணிக்கையில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.தொழில்முனைவோர் வங்கிகளில் கடன் பெற முயற்சிக்கும்போது, சில இடையூறுகள் ஏற்படலாம். வங்கிகள் கேட்கும் ஆவணங்களையும், தெளிவான திட்ட அறிக்கையும் அளிக்கும்பட்சத்தில், வங்கிகள் உடனடியாக கடனுக்கான ஒப்புதலை வழங்கும் என்றார்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செ.மு. முருகேசன், அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் ஆ. சுந்தரம் ஆகியோர் திட்டம் குறித்து விளக்கி பேசினார். மாவட்ட ஊராட்சித் தலைவர் கீதா மணிவண்ணன் வாழ்த்தி பேசினார். முன்னதாக மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வே. துரை வரவேற்றார். மேலாளர் (கிராமத் தொழில்கள்) கி. கோகிலம் நன்றி கூறினார்.