முகப்பு
தற்போதைய செய்திகள்

புது வீடு வாங்க அரசு ஊழியர்களுக்கு முன்பணம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2013- 14-ஆம் நிதியாண்டில் அரசு ஊழியர்கள்(ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள் தவிர) புது வீடு கட்ட முன்பணம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். அதாவது கட்டிய வீட்டை வாங்குவது,

Updated On : 23 ஜூன் 2013, 7:44 pm IST
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் புது வீடு வாங்க முன்பணம் வேண்டி விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2013- 14-ஆம் நிதியாண்டில் அரசு ஊழியர்கள்(ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள் தவிர) புது வீடு கட்ட முன்பணம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். அதாவது கட்டிய வீட்டை வாங்குவது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்குவது, மனை வாங்கி வீடு கட்டுவது, இருக்கும் வீட்டை மேம்படுத்த முன்பணம் வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம். முன்பணம் கோரி விண்ணப்பிப்பவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அவரவர் அலுவலக தலைமை அதிகாரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிப்பவர்களுக்கு, விண்ணப்ப முதுநிலை வரிசைப்படி பரிசீலிக்கப்படும் எனச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.